சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனம் மன்றத்தின் உறுப்பினர்களுடன் கருத்துரையாடல் நடைபெற்றது.
குறும்படங்கள் வாயிலாக மாணவர்களுக்கிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி எடுத்தாளப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது.
கேட்கும், பேசும் திறனற்ற, மாற்றுத்திறனாளிகளான குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று அவர்களுடன் மனம் மன்ற உறுப்பினர்கள் நேரம் செலவிட்டனர். அவர்களுடன் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாததாக இருந்ததென பின்னூட்டங்கள் வந்தன.
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்குள்ள முதிய தலைமுறையினருக்கு மனம் மன்ற உறுப்பினர்கள் சேவைகள் செய்தனர். ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் எண்ணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு, ஆடிப் பாடி அவர்களை மகிழ்விக்கவும் செய்தனர்.
அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் தங்களது வேலை வாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவிடும் வகையில், மனம் மன்றத்தின் சார்பாக ஒரு நாள் பயிற்சிப் பட்டறை மானவர்களாலேயே நடத்தப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
No comments:
Post a Comment