மனம்
மன்றம் சார்பாக 23.08.2011 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிரியர்கள் திரு.
நரேந்திரன், செல்வி. அருண்மொழி, திரு. மகேந்திரன் மற்றும் திருமதி. சோழம்மா தேவி
ஆகியோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 20.08.2011 அன்று நடத்தப்பட்ட துளிர்
ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்திக் கொடுத்த மனம் மன்ற
உறுப்பினர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன. இதுவரை தமிழ் வழியில் பயின்று
வந்து நம் கல்லூரியில் இணைந்த முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களின் மொழி சார்ந்த
பயத்தினைப் போக்கவும், அவர்களின் தயக்க சுபாவம், தாழ்வு மனப்பான்மை போன்ற இதர
பிரச்சனைகளைக் களையும் முயற்ச்சிகள் கலந்தாயப்பட்டன. இது தொடர்பாக ஒரு நாள்
ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தலாம் எனவும், நிகழ்ச்சி நாள் 17-09-2011 அன்று
நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
R. பிரதீப்
2 ஆம் ஆண்டு - இயந்திரவியல் துறை.
No comments:
Post a Comment