உதவி இணைப்பு:
மாணவர்கள் தங்கள் தேவைகளை தெரிவிக்க தொலைபேசி எண் ஒன்று துவங்கப்படும். உதவி கேட்க்கும் மாணவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
மனம் நூலகம்:
மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை தங்கள் இளநிலை நண்பர;களுக்கு பயன்படுத்த உதவ இந்த நூலகம் பயன்படும். ஆர்வலர்களைக்கொண்டு இந்த நூலகம் நிர்வகிக்கப்படும்.
மனம் இதழ்:
மாணவர்களின் சிந்தனை தெறிப்புகளை பதிவுசெய்வதொடு நில்லாமல் இதை விநியோகிக்கவும் இந்த இதழ் பயன்படும். இது மாதமிருமுறை வெளியாகும். இது மாணவர்களின் தனி திறன்களை வெளிப்படுத்த, பலவித கலைகளின் சங்கமமாக திகழும். மேலும் தமிழின் சிறப்பை வளர்க்க இது உதவும்.
மனம் மாற்றம்:
மாணவர்களிடையே மிகுதியாக பரவிவரும் புகையிலை மற்றும் மது பழக்கத்தை வேரோடு அழிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவ நண்பர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்த இது உதவும். இது மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பல்கலைகழகம் வெளியே இருக்கும் கடைகளில் மாணவர்களே இது குறித்து தயாரித்த ஓவியப்பலகைகள், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும்.
கலை இலக்கிய நிகழ்ச்சிகள்:
மாணவர்களின் பொருளாதார தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் மட்டுமல்லாது கலை இலக்கிய அறிவை வளர்த்துக்கொள்ள இது உதவும். பட்டிமன்றங்கள், கலை இலக்கிய இரவுகள் நடத்தப்படும்.
கண்காட்சிகள்:
மனம் என்ற தலைப்புகளில் ஓவியக்கண்காட்சி, குறும்பட கண்காட்சிகள் பல்கலைகழக அளவில் நடத்தப்படும். இந்த கண்காட்சியில் காட்சிப்பொருளை முன்வைக்க கட்டணங்கள் வசூலிக்கப்படும். சிறந்த காட்சிபொருளுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
மகிழ் நாள்:
மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் நட்பையும் வளர்க்க சிறிய விளையாட்டுகள், நலிந்த பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றைக்கொண்ட மகிழ் நாள் கொண்டாடப்படும்.
விழிப்புணர்வுப் பேரணி:
சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகத்தான் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படும்.
No comments:
Post a Comment