மனம்:
- மனம் என்பது மூளைக்கும் உடலுக்கும் இடைப்பட்ட இடைமுகப்பு ஆகும்.
- ஒருவருடைய எண்ணம், சிந்தனையின் கூட்டமைப்பு.
- ஒருவருடைய குணத்தை பிரதிபலிப்பது மனம்.
- வியர்வை உடலின் மணம்; மனம் ஆத்மாவின் மணம்
- மூளையில் தோன்றுவதை சமூகத்தோடும் சுற்றுசூழலோடும் ஒப்பிடுவதே மனம்.
- உணர்வுகளின் ஆதியே மனம்.
“மனம்” மன்றம்:
மாணவர்களுக்காக மாணவர்களே இயக்கும் மன்றமே மனம் ஆகும். மாணவர்களின் படிப்பு சார்ந்த, மனம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த தேவைகளை தங்களுக்குள் பகிரிந்துகொள்ளும் மன்றமாகும். அனைத்து மாணவர்களும் பாரபட்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இயங்க இம்மன்றம் வழிவகைசெய்யும். இது பலதுறை மாணவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும், நட்பையும், சமூக முன்னேற்றத்தையும், சிந்தனை பகிர்வையும் உருவாக்க முனைந்து செயல்படும். பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் ஆவார்கள். மனம் மன்றத்தின் மூலம் சேகரிக்கப்படும் தொகைக்கு, வங்கிக்ககனக்கு தொடங்கி, வரவு செலவு முறையாகப் பேணப்படும்.
No comments:
Post a Comment