Wednesday 7 September 2011

Report - 07.09.2011


          Manam Club meeting was held on 24.08.2011 at 5.00 PM in Academic Block (205). The club members along with other students of All years and Staff Mr. Narendhran, Ms. Arunmozhi, Mr. Mahendran, Mrs. Shozhammal devi were present.  During the meeting, the students were appreciated for making the Thulir – One Day Workshop on Placement Skills, a grand success which was held on 20.08.2011. The following discussion were carried out in the meeting.
  • How to bridge the gap between English and Tamil media student and eradicate the communication barrier
  • How to give self-confidence and personality development skills to fresher students
  • How to help students to cope up with home sickness

Members of the club shared their comments. As a result, An orientation program me cum fresher’s day was planned to conducted for the I year students to provide the platform to show case their talents and make them mingle into other department friends. The program was dated to be held on 17.09.2011, Saturday.

-  K. Ramesh
II Year - B.E. Mechanical Engineering

அறிக்கை - 07.09.2011


மனம் மன்றம் சார்பாக 23.08.2011 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிரியர்கள் திரு. நரேந்திரன், செல்வி. அருண்மொழி, திரு. மகேந்திரன் மற்றும் திருமதி. சோழம்மா தேவி ஆகியோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 20.08.2011 அன்று நடத்தப்பட்ட துளிர் ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்திக் கொடுத்த மனம் மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன. இதுவரை தமிழ் வழியில் பயின்று வந்து நம் கல்லூரியில் இணைந்த முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களின் மொழி சார்ந்த பயத்தினைப் போக்கவும், அவர்களின் தயக்க சுபாவம், தாழ்வு மனப்பான்மை போன்ற இதர பிரச்சனைகளைக் களையும் முயற்ச்சிகள் கலந்தாயப்பட்டன. இது தொடர்பாக ஒரு நாள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தலாம் எனவும், நிகழ்ச்சி நாள் 17-09-2011 அன்று நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.


R.  பிரதீப்
2 ஆம் ஆண்டு - இயந்திரவியல் துறை.

Friday 2 September 2011

மனம் மன்றத்தின் செயல்பாடுகள்



     சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனம் மன்றத்தின் உறுப்பினர்களுடன் கருத்துரையாடல் நடைபெற்றது.

     குறும்படங்கள் வாயிலாக மாணவர்களுக்கிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி எடுத்தாளப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது.

     கேட்கும், பேசும் திறனற்ற,  மாற்றுத்திறனாளிகளான குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று அவர்களுடன் மனம் மன்ற உறுப்பினர்கள் நேரம் செலவிட்டனர். அவர்களுடன் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாததாக இருந்ததென பின்னூட்டங்கள் வந்தன.

     முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்குள்ள முதிய தலைமுறையினருக்கு மனம் மன்ற உறுப்பினர்கள் சேவைகள் செய்தனர். ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் எண்ணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு, ஆடிப் பாடி அவர்களை மகிழ்விக்கவும் செய்தனர்.

     அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் தங்களது வேலை வாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவிடும் வகையில், மனம் மன்றத்தின் சார்பாக ஒரு நாள் பயிற்சிப் பட்டறை மானவர்களாலேயே நடத்தப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

மனம் மன்றத்தின் திட்டப்பணிகள்



உதவி இணைப்பு:
மாணவர்கள் தங்கள் தேவைகளை தெரிவிக்க தொலைபேசி எண் ஒன்று துவங்கப்படும். உதவி கேட்க்கும் மாணவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

மனம் நூலகம்:
மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை தங்கள் இளநிலை நண்பர;களுக்கு பயன்படுத்த உதவ இந்த நூலகம் பயன்படும். ஆர்வலர்களைக்கொண்டு இந்த நூலகம் நிர்வகிக்கப்படும்.

மனம் இதழ்:
மாணவர்களின் சிந்தனை தெறிப்புகளை பதிவுசெய்வதொடு நில்லாமல் இதை விநியோகிக்கவும் இந்த இதழ் பயன்படும். இது  மாதமிருமுறை வெளியாகும். இது மாணவர்களின் தனி திறன்களை வெளிப்படுத்த, பலவித கலைகளின் சங்கமமாக திகழும். மேலும் தமிழின் சிறப்பை வளர்க்க இது உதவும்.

மனம் மாற்றம்:
மாணவர்களிடையே  மிகுதியாக பரவிவரும் புகையிலை மற்றும் மது பழக்கத்தை வேரோடு அழிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவ நண்பர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்த இது உதவும். இது மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பல்கலைகழகம் வெளியே இருக்கும் கடைகளில் மாணவர்களே இது குறித்து தயாரித்த ஓவியப்பலகைகள், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும்.

கலை இலக்கிய நிகழ்ச்சிகள்:
மாணவர்களின் பொருளாதார தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் மட்டுமல்லாது கலை இலக்கிய அறிவை வளர்த்துக்கொள்ள இது உதவும். பட்டிமன்றங்கள், கலை இலக்கிய இரவுகள் நடத்தப்படும்.

கண்காட்சிகள்:
மனம் என்ற தலைப்புகளில் ஓவியக்கண்காட்சி, குறும்பட கண்காட்சிகள் பல்கலைகழக அளவில் நடத்தப்படும். இந்த கண்காட்சியில் காட்சிப்பொருளை முன்வைக்க கட்டணங்கள் வசூலிக்கப்படும். சிறந்த காட்சிபொருளுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

மகிழ் நாள்:
மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் நட்பையும் வளர்க்க சிறிய விளையாட்டுகள், நலிந்த பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றைக்கொண்ட மகிழ் நாள் கொண்டாடப்படும்.

விழிப்புணர்வுப் பேரணி:
சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகத்தான் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படும்.

மனம் மன்றம்



மனம்:


  • மனம் என்பது மூளைக்கும் உடலுக்கும் இடைப்பட்ட இடைமுகப்பு ஆகும்.
  • ஒருவருடைய எண்ணம், சிந்தனையின் கூட்டமைப்பு.
  • ஒருவருடைய குணத்தை பிரதிபலிப்பது மனம்.
  • வியர்வை உடலின் மணம்; மனம் ஆத்மாவின் மணம்
  • மூளையில் தோன்றுவதை சமூகத்தோடும் சுற்றுசூழலோடும் ஒப்பிடுவதே மனம்.
  • உணர்வுகளின் ஆதியே மனம்.



“மனம்” மன்றம்:




மாணவர்களுக்காக மாணவர்களே இயக்கும் மன்றமே மனம் ஆகும். மாணவர்களின் படிப்பு சார்ந்த, மனம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த தேவைகளை தங்களுக்குள் பகிரிந்துகொள்ளும் மன்றமாகும். அனைத்து மாணவர்களும் பாரபட்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இயங்க இம்மன்றம் வழிவகைசெய்யும். இது பலதுறை மாணவர்களிடையே கருத்துப்  பரிமாற்றத்தையும், நட்பையும், சமூக முன்னேற்றத்தையும், சிந்தனை பகிர்வையும் உருவாக்க முனைந்து செயல்படும். பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் ஆவார்கள். மனம் மன்றத்தின் மூலம் சேகரிக்கப்படும் தொகைக்கு, வங்கிக்ககனக்கு தொடங்கி, வரவு செலவு முறையாகப் பேணப்படும்.